கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி: அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருக்கிறார்.

கேரளாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன் எப்போதும் இல்லாத உச்சமாக 1,564 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதன் மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 39,708 ஆக அதிகரித்தது.

கேரளாவில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து அம்மாநில  சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருப்பதாவது: இப்போது இருக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக செப்டம்பர் மாதம் பாதிப்பு சதவீதம் அதிகமாகும்.

நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.