தமிழ்நாட்டில் 20 ஆயிரம் டீனேஜ் பெண்கள் கர்ப்பம் : அதிர்ச்சி தகவல்

சென்னை

டந்த 9 மாதங்களில் டீனேஜ் என கூறப்படும் 19 வயதுக்குட்பட்ட 20000 பெண்கள் கருவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெண்களின் திருமண வயது 18 என அரசு அறிவித்துள்ளது.    அதற்கு கீழ் வயதுள்ள பெண்கள் திருமணம் செய்வது சட்ட விரோதமாகும்.   அவ்வாறு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.   இவ்வாறு சிறுவயதுப் பெண்கள் திருமணம் குறித்து கடந்த 2008 முதல் 2018 வரை 6965 வழக்குகள் பதிந்து பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கப்ப்ட்டுள்ளது.

தேசிய சுகாதார மையத்தின் தமிழ்நாடு கிளையின் இயக்குனர் தாரேஸ் அகமது, “கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் 20000 டீனேஜ் பெண்கள் கருவுற்றுள்ளனர்.    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள் ஆவார்கள்.

இந்த பெண்கள் அனைவரும் திருமணமானவர்கள்.   அதிலும் குறிப்பாக 16 முதல் 18 வயதில் உள்ள பெண்கள் ஆவார்கள்.   அவர்களிலும் மிகக் குறைவானோர் மட்டுமே கருச்சிதைவு செய்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.     மற்றவர்கள் கர்ப்பத்தை தொடரவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பி உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் துளிர் என்னும் அமைப்பை நடத்துபவருமான வித்யா ரெட்டி, “இதில் சமூக நலனை விட பெண்களின் உடல் நலமும் கவனிக்கப்பட வேண்டும்.   பெண் குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் கருத்தடை பற்றியும் அவசியம் கற்பிக்க வேண்டும்.

ஆண்களைப் போல் பெண்களால் கருத்தடை முறைகளை பின்பற்ற  முடியுமா?  அவர்கள் எங்கு சென்று இது குறித்து கேள்விகள் கேட்க முடியும்?  அதனால் கருத்தடை பொறுத்த வரையில் அவர்கள் ஆண்களை நம்பி உள்ளனர்.   அதுவும் சிறு பெண்கள் கருவுற ஒரு முக்கிய காரணம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

பிரபல மகப்பேறு நிபுணரான சாந்தி குணசிங், “இந்த பதின்ம வயதுப் பெண்கள் மனதளவிலும் உடலளவில் பிள்ளை பேறுக்கு தயாராகதவர்கள்.    அவர்கள் இன்னும் வளர வேண்டியவர்கள்.   இந்த வயதுப் பெண்களுக்கு எலும்பு வளர்ச்சி முழுமையாக இருக்காது.  இதனால் பிள்ளைப்பேறு அறுவை சிகிச்சைகள் அதிகரிக்கின்றன.

அது மட்டுமின்றி மனதளவில் பிள்ளைப்பேறுக்கு தயாராகாத பெண்கள் குழந்தை பெறும்  போது அந்த பெண்ணுக்கு மன அழுத்டம் அதிகரிக்கும்.  அது அந்த பெண்ணுக்கு மட்டுமின்றி அவள் குழந்தைக்கு அபாயமான ஒன்றாகும்.    இதை தவிர்க்க பெண் குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்தே பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.