2002ம் ஆண்டு குஜராத் கலவரம்: முன்னாள் பாஜ பெண் அமைச்சர் விடுதலை

அகமதாபாத்:

டந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற  நரோடா பாடியா கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கீழ்கோர்ட்டு 28 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய நிலையில், மேல்முறையீடு  வழக்கில் குஜராத் மாநில உயர்நீதிமன்றம் முன்னாள் குஜராத்  பெண் அமைச்சர் மாயாவை  விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது மாயா கோடானி  மாநில  அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் நரோடா பாட்டிய நகரில்  நடைபெற்ற கவலரத்தில்  97 முஸ்லீம்கள் கொடூரமாக  கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு  கலவரத்தில் தொடர்பு இருந்தாக அப்போதைய மாநில அமைச்சர்  மாயா கோட்னானி உள்பட  32 பேருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

ஆனால் கீழ்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை யின்போது, கலவரத்தின்போது, தான்  அகமதாபாத் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக மாயா கோடானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.  தீர்ப்பில், மாயா கோடானி மக்களை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதனை பார்த்த எந்த சாட்சியையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவில்லை என்றும்,  சாட்சியம் அளித்த 11 பேரில், யாரின் சாட்சிய அறிக்கையையும் நம்பத்தகுந்தது அல்ல என்றும்  கூறி, மாயாவை விடுதலை செய்வதாக அகமதாபாத் உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.