2008 மும்பை தாக்குதல் கோரமான நிகழ்வு: சீனா கருத்து

பெய்ஜிங்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், மிகவும் மோசமான மற்றும் பயங்கரமான சம்பவமாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

“தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் சின்ஜியாங்கில் மனித உரிமைப் பாதுகாப்பு” எனும் பெயரில், சீனாவால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ‘தாள்’ வெளியீட்டில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் அதிகரித்துவரும் தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், மனித இனத்திற்கு துயரத்தை தந்துள்ளன.

அந்த நடவடிக்கைகள் அமைதிச் சூழலை கடுமையாக பாதிப்பதோடு, மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷியின் சீனப் பயணத்தின்போது, இந்த தாள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது நமக்கு நினைவிருக்கலாம்.

– மதுரை மாயாண்டி