2011 தேர்தல்: ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும்! ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை.

டந்த  2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில்,போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை தோற்டிகத்தார் வெற்றி பெற்றார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று அதிரடியாக கூறி உள்ளது. இதன் காரணமாக 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஸ்டாலின் வென்றதாக சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி,  அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 6 ஆண்டுகாலமாக  நடைபெற்று வந்தது..

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில், ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.