உலக மக்கள் அனைவரும் 2021 ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், 2014 ம் ஆண்டே இன்னமும் முடிவு பெறாத நாடு ஒன்று இந்த உலகத்தில் உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எதியோப்பியாவில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது.

1582ஆம் ஆண்டு முதல் உலகமே இன்று பின்பற்றும் க்ரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டு செயல்டுகிறது.

ஆனால் எதியோப்பியாவோ இன்றுவரை அதை ஏற்றுக்கொள்ளாமல் ஜீலியன் காலண்டரையே பின்பற்றுகிறது.

ஆண்டுக்கு 13 மாதங்கள் கொண்டதாக உள்ள இந்த ஜுலியன் காலண்டரில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 30 நாட்கள் என்று 12 மாதங்களும், 13 வது மாதத்தில் 5 அல்லது 6 நாட்களும் என ஆண்டுக்கு மொத்தம் 365 அல்லது 366 நாட்கள் உள்ளது.

இவ்விரு காலணாடரையும் பொருத்தவரை நாட்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லையென்ற போதும்.

ஆர்த்தோடாக்ஸ் சர்ச்

பழைமைவாத கிருத்துவர்களான இவர்கள் ஏசு நாதர் கி.மு. 7ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதில் ஆனித்தரமாக இருப்பதாலேயே இந்த குழப்பம்.

கிருத்தவ மத நம்பிக்கை கொண்ட மற்ற அனைவரும் ஏசு அவதரித்தது கி.பி. 1 என கூறி க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி வருகையில் எத்தியோப்பியர்கள் மட்டும் தங்களுக்கென்று தனி காலண்டரை பின்பற்றி வருகின்றனர்.

நமது க்ரிகோரியன் காலண்டர் படி செப்டம்பர் 11 அன்று தான் ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு புத்தாண்டு.

பாறைகளை குடைந்து வடிவமைக்கப்பட்ட தேவாலயம்

இவர்களின் இந்த காலண்டரால் அதிகம் குழப்பமடைவது வெளிநாடுகளில் இருந்து செல்லும் பயணிகள் தான். ஆன்லைனில் விடுதி மற்றும் பயண டிக்கெட் பதிவுசெய்ய நினைப்பவர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது. இதற்காகவே பயண ஏற்பாட்டளர்களின் உதவியை இங்கு வருபவர்கள் நாடவேண்டியுள்ளது.

யுனெஸ்கோ-வால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா தளங்கள் அதிகமுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது பணக்கார நாடான எத்தியோப்பியா மற்ற நாடுகளில் இருந்து ஏழு, எட்டு ஆண்டுகள் குறைவாக இன்னுமும் 2014 ல் வாழ்ந்து கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.