2016 புத்தாண்டு பலன்: மிதுன ராசி அன்பர்களுக்கு..

மிதுன ராசி

mithunam

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும்.

இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்