2017; முதல் நாளில் அதிக வசூல் கண்ட  படங்கள் எவை தெரியுமா?

எந்தப் படமுமே முதல்நாள் அன்று நல்ல வசூல் காண்பது வழக்கமே.   அந்த நிலையில் கடந்த 2017ஆம் வருடம் முதல் நாளில் அதிக வசூல் கண்ட 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.   அந்த ஐந்துப் படங்களுமே இந்தி மொழியில் வெளியான திரைப்படங்கள் என்ற போதிலும்  ஒரு தென்னிந்தியாவில் தயாரான படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆம்  தெலுங்கு மொழியில் உருவாகிய பாகுபலி 2 படத்தின் இந்திப் பதிப்புதான் முதலிடம் பெற்றுள்ளது.   பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமனா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடித்த இந்தப் படம்  மொத்தம் ரூ. 1500 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளது.   இந்தியாவில் முதல் முறையாக இந்தத் திரைப்படம் 9000 திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பட்டியல் பின் வருமாறு :

1.       பாகுபலி 2    –   ரூ.41 கோடி

2.       டைகர் ஜிந்தா ஹை   –  ரூ.34.10 கோடி

3.       கோல்மால் அகைன்  –   ரூ. 30.14 கோடி

4.       டியூப்லைட்    – ரூ 21.15 கோடி

5.       ரயீஸ்    –   ரூ.  20.42 கோடி