இந்த கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை:

2018ம் ஆண்டில் நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2017-2018 கல்வி ஆண்டிற்கான 10,11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி 10-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முடியும். 10-ம் வகுப்பிற்கான தேர்வு நேரம் 2.30 மணி நேரமாகும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் மே- 30-ம் தேதி வெளியிடப்படும்.

12-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் மே -16-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
2017-2018 academic year 10, 11, 12th standard public exam dates announced by tamilnadu government