ஜி20 உச்சி மாநாடு அர்ஜென்டினாவில் இன்று தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

பியோனஸ் அயர்ஸ்:

ர்ஜென்டினாவில் இன்று ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்ப தற்காக இந்திய பிரதமர் மோடி அர்ஜெட்டினா சென்றுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா உள்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கொண்ட கூட்டமைப்பே ஜி-20 (Group of 20) என அழைக்கப்படுகிறது.

இந்த 2 நாள் மாநாடு இன்று தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் பியோனஸ் அயர்ஸ்-ல் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் அர்ஜெட்டினாவில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியும் அர்ஜென்டினா சென்றடைந்துள்ளார்.

இந்த மாநாட்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரவாதங்கள்  குறித்து  விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டின் இடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேச திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படு கிறது.