சென்னை,

மிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான  முதல் கூட்டத்தொடர் நாளை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.

கடந்த ஆண்டு தமிழக கவர்னராக பணியேற்ற  பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டப்பேரவையில் ஆற்றப்போகும் முதல் உரையும் இதுவே.

ஆண்டுதோறும் சட்டசபை முதல் கூட்டத் தொடரில் கவர்னர்  பங்கேற்று உரையாற்றுவது வழக்கம், அதுபோல நாளை கூட உள்ள தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுனர் பங்கேற்று உரையாற்று கிறார்.

நாளை சட்டசபைக்கு வரும் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர், தமிழகமுதல்வர் எதிர்க்கட்சி தலைவர், அவை முன்னவர் ஆகியோர் அழைத்து சட்டசபைக்குள் அழைத்து செல்வார்கள். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்ததும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து  காலை 10 மணி அளவில் அவரது உரை தொடங்கும். அவரது உரையை தொடர்ந்து சபாநாயகர் அந்த உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார்.

அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த நாள் முதல் தொடர்ந்த நடைபெறும். இந்த கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகை வரை   நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.