2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பணி மாறுதல் தேவைப்படுவோர் உடனடியாக விண்ணப்பங்களை அளிக்க  கோரி உள்ளது.

அதன்படி கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 8ந்தேதி முதல் 15ந்தேதி வரை நடைபெறுகிறது.

 கலந்தாய்விற்கான கால அட்டவணை

பொதுமாறுதல் விண்ணப்பம்:

21.06.2019 முதல் 28.06.2019 வரை (வெள்ளிக் கிழமைக்குள்) பொது மாறுதல் தேவைப்படுவோர் அதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கலந்தாய்வு நடைபெறும்  விவரம்:

08.07.2019 (திங்கள் கிழமை) முற்பகல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்)

08.07.2019 (திங்கட்கிழமை) பிற்பகல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – (மாவட்டம் விட்டு மாவட்டம் – அதாவது அலகுவிட்டு அலகு மாறுதல்)

09.07.2019 (செவ்வாய்) முற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

09.07.2019 (செவ்வாய்) பிற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

10.07.2019 (புதன்) முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்

10.07.2019 (புதன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்

11.07.2019 (வியாழன்)முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்

11.07.2019(வியாழன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

11.07.2019 (வியாழன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்

12.07.2019 (வெள்ளி) முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

12.07.2019 (வெள்ளி) பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

13.07.2019 (சனி) முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்

13.07.2019(சனி) பிற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்தில்

14.07.2019 (ஞாயிறு) முற்பகல் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்

14.07.2019(ஞாயிறு) பிற்பகல் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் -வருவாய்‌ மாவட்டத்திற்குள்

15-07-2019 (திங்கள்) முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -மாவட்டம் விட்டு மாவட்டம்

15-07-2019 (திங்கள்) முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Education Dept. Announcement, General Transfer details, Teachers General Transfer
-=-