வரும் பொதுத் தேர்தல் மோடிக்கும் ராகுலுக்கும் இடையில் இல்லை : காங்கிரஸ் மூத்த தலைவர்

டில்லி

ரும் 2019 பொதுத் தேர்தல் ராகுலுக்கும் மோடிக்கும் இடையில் நடப்பது இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெயராம் ரமேஷ். முன்னாள் மக்களவை உறுப்பினரான இவர் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஆவார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குழுவில் ஒருங்கிணப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயராம் ரமேஷ் ஒரு ஆங்கில செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் ஜெயராம் ரமேஷ், ”நான் வெகு நாட்களாக தேர்தல்கள் என்பது இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையில் உள்ளது இல்லை எனவும் கட்சிகளுக்கு இடையில் உள்ளது எனவும் சொல்லி வருகிறேன். தேர்தல்களில் கட்சி, கட்சியின் ஆளுமை, கட்சியின் சின்னம், கட்சியின் கொள்கைகள் ஆகியவையே முக்கிய இடம் வகிக்கின்றன. ஆகவே நடைபெற உள்ள தேர்தல் மோடிக்கும் ராகுலுக்கும் இடையில் இல்லை. பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலானது.

அதே நேரத்தில் மோடி என்னும் தனிப்பட்ட மனிதரின் செல்வாக்கினால் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு 7-8% வாக்குகள் அதிகம் கிடைத்தது என்பதை ஒப்புக் கொள்கிறென். ஆனால் அரசியல் அமைப்பு என்பது கட்சியின் அடிப்படையில் வருவதாகும். ஊடகங்கள் எப்போது கட்சியின் அடிப்படையிலேயே கருத்டுக்கலை தெரிவிக்கின்றன. மகக்ளும் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் வாக்குகளை அளிக்கின்றனர்.” என கூறி உள்ளார்.