உலககோப்பை கிரிக்கெட்2019: அதிகாரப்பூர்வ தீம் பாடலை வெளியிட்டது ஐசிசி

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுலை 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை  இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. .

போட்டி தொடங்க இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலக கோப்பை ஆட்டத்திற்கான தீம் பாடல் இன்று வெளியிடப்பட்டது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் பாடப்பட்டு, ஸ்டாண்ட் பை  (Stand By) என்னும் தலைப்பில்  அதிகாரப்பூர்வ தீம் பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

. உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் கலந்து ஆலோசித்து இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கோடைக் காலத்தில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ள தாகவும், அதே வேளையில்   இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed