ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலை யில்,இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவை விட காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி  முன்னிலை வகித்து வருகின்றன.

அதன்படி,  பாஜக 29 இடங்களிலும், ஜேஎம்எம் 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களி லும்,  ஏஜேஎஸ்யு 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

81 தொகுதிகளைக்கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்கு  5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று நண்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.

காலை 10 மணி  நிலவரப்படி,  பாஜக 29 இடங்களிலும், ஜேஎம்எம் 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களி லும்,  ஏஜேஎஸ்யு 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஜார்கண்டில், ஜேஎம்எம், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால், அங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.