Random image

2019 தேர்தல்: மோடி தலைமையில் 100 தொகுதிகளில் 50 பொதுக்கூட்டம்….பாஜக திட்டம்

டில்லி:

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்த அவர் சுமார் 16 ஆயிரம் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இன்று தெலுங்கானாவில் ஆலோசனை நடத்தினார். 400 தொகுதிகளில் கட்சியினரை தயார்படுத்தும் திட்டத்தில் இதுவரை 200 தொகுதிகளில் இப்பணியை பாஜக முடிந்துள்ளது.

தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக பிப்ரவரி மாதத்துக்குள் 100 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 50 பொதுக்கூட்டங்கள் மூலம் 100 முதல் 150 தொகுதிகளில் வாழும் வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ளது.

விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலும் சில பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கவுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, அடுத்து உத்தரப்பிரதேசம் அசாம்கர், வாரணாசி, மிர்சாப்பூர் பொதுக்கூட்டங்களில்பேசுகிறார்.