புதுடெல்லி: நடந்த முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில், இந்திய அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தத் தொகை, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில் செலவிடப்பட்டதாகும். அதாவது, ஒரு வாக்குக்கு ரூ.700 என்ற வீதத்தில், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.100 கோடி என்கிற விகிதத்தில் செலவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், தற்போதைய செலவில் பாதியளவான ரூ.30,000 கோடி மட்டுமே செலவானதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த 2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தல், இதுவரை நடைபெற்ற தேர்தலிலேயே மிகவும் செலவுமிகுந்த தேர்தலாக மதிப்பிடப்படுகிறது. மேலும், இந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் 902 மில்லியன் என்பதாக அதிகரித்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல் கட்சிகள் செலவுசெய்யும் பணம் இப்படி கூடிக்கொண்டே போனால், ஜனநாயகம் எப்படி மேம்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.