2019 பாராளுமன்ற தேர்தல்…களைகட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர்! 

ஜெய்ப்பூர்: 2019 பாராளுமன்ற  தேர்தலை ஒட்டி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பிரச்சார போரே நடக்கும் என கூறப்படுகிறது.

2019 பாரளுமன்ற தேர்தல் மே மாதம் நடக்கவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் விளம்பர யுக்திகள் மாறிவருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை டுவிட்டரில் மேற்கொண்டார். அதேபோல் அடுத்து நடக்கவுள்ள தேர்தலிலும் காங்கிரஸும் பாஜகவும் சமூகவலைதளங்களில் குறிப்பாக முகநூல் மற்றும் டுவிட்டரில் தங்கள் பிரச்சார போரைத் தொடங்கும். காரணம், இந்தியாவில் மொத்தம் 900 மில்லியன் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் 50 சதவீதம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.  இந்தியாவில் 300 மில்லியன் முகநூல் பயனாளர்களும் 200 மில்லியன் நபர்கள் டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் பயனாளர்களாகவும் உள்ளனர். இது எந்த நாட்டினருக்கும் இல்லாத கூடுதல் பலமாக கட்சிகள் பார்க்கின்றன.

மெல்போர்ன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உஷா. எம்.  இவரும் தேர்தலில் சமூக வலைதளங்களும் புள்ளிவிவர அலசலும்தான் மிகப் பெரிய பங்குதாரர்களாக இருக்கும் என கூறியுள்ளார். அண்மையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் சமூகவலைதளங்களின் மூலம் நடக்கும் புரட்சியாகத்தான் கருதப்படும்.