Random image

2019 தேர்தல்: பாஜக.வுக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சிகளின் இளைஞரணியினர்

டில்லி:

மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் இளைஞர் அணியினர் பிரம்மாணட கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். மத்திய பாஜக அரசால் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை முன்வைத்து 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்த அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே கூறுகையில்,‘‘பல்வேறு எதிர்கட்சிகளின் இளைஞரணியினர் இந்தியாவின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைய முன்வந்துள்ளனர். இது தேர்தல் ஆண்டு. வாக்களிப்பதில் இந்திய இளைஞர்களின் பங்கு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இளைய சமுதாயத்தை புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.

இளைய சமுதாயத்தை சென்றடையும் வகையில் சமாஜ்வாடி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்தள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டு கட்சி, திமுக ஆகிய கட்சிகளின் இளைஞரணி நிர்வாகிகள் இது குறித்து மீடியாக்களிடம் விளக்கம் அளிக்கவுள்ளனர். இடதுசாரிகளின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பும் இதில் கலந்தகொள்கிறது. ஆனால் ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் இதில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.