Random image

2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்! கணித்தவர்: வேதா கோபாலன்

பிரபல எழுத்தாளர் மற்றும் ஜோதிட கணிப்பாளரான  வேதாகோபாலன் நமது பத்திரிகை.காம் இணைய இதழுக்காக பிரத்யேகமாக இந்த ஆண்டுக்கான (2019) ஜோதிட பலன்களை 12 ராசிகளுக்கும் எழுதி உள்ளார்.

ஏற்கனவே  பிரபல பத்திரிகைகளில் கதை கட்டுரைகள் எழுதி பிரபலமானவர் வேதா கோபாலன். பெண்களுக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்.  ஒரே வரியில் ஓராயிரம் விஷயங்களை எளிதில் புரியும் வகையில்  நச்சென்று, சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்வதில் வல்லவர். 

கடந்த சில வருடங்களாக நமது பத்திரிகை.காம் இணைய இதழுக்கு வார ராசிபலன்கள் எழுதி பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது 2019ம் ஆண்டுக் கான பொதுப்பலன்களை கணித்து எழுதி உள்ளார். இன்று முதல தினசரி 3 ராசிகள் வீதம் ஆண்டு பலன்கள் வெளியாகிறது…

வாசகர்கள் தங்களது ராசிக்கான பொதுப்பலன்களை அறிந்துகொள்ளுங்கள்…

வணக்கங்க. இந்த வருஷம் நல்லாத்தான் பிறந்திருக்கு. எப்படி என்கிறீர்களா?  வருஷம் பிறந்த ஜாதகத்தைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போவீங்க. பலருக்கு நல்ல வேலை கிடைக்கும். ரொம்ப காலமாய்த் தள்ளிப்போன் விஷயங்கள் நடக்கும். குறிப்பாய் மேரேஜ் நடந்துவிடும்.

நாடு சுபிட்சமான பாதையில் போகும். சூப்பர் மழை என்று சொல்ல முடியாது என்றாலும் மோசமில்லை. அரசியல்ல எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராததை எதிர்பாருங்க.

எனினும் எது எப்போ நடக்கும்னு தெரியணும்ல? குறிப்பா ராகு பெயர்ச்சி குரு பெயர்ச்சி என்று இரண்டு  மேஜர் சம்பவங்கள் இருக்கே இந்த வருஷம். அதன்படி எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்த்துடுவோமா?

எது எப்படியானாலும் இதெல்லாம் கோள்சாரப்பலன்கள்தாங்க. உங்க ஜாதகத்தை ஒரு எக்ஸ்பர்ட் ஜோதிடர் புரட்டிப்பார்த்துச் சொல்லக்கூடிய பலன்கள்தான் அதிக வெயிட்டாய் இருக்கும்.

அதாவது சந்திரன் நின்ற இடத்திலிருந்து எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்வது பொதுவான ராசிபலன். நீங்கள் பிறந்த வேளையில் எந்தெந்த கிரகம் எங்கெங்கே இருந்தன? இப்போதுள்ள தசா புக்திகள் என்னென்ன?  இவையெல்லாம் உங்கள் வாழ்வை இன்னும் துல்லியமாய்த் தீர்மானிக்கம் என்று சொல்லிக்கொண்டு..

 இதோ பொதுப்பலன்கள்…

(சொற்சிக்கனம் மற்றும் சுவாரஸ்யம் கருதி, கிரக சஞ்சார ராசிகள்… அதிசாரம்.. பெயர்ச்சி தினங்கள் போன்ற டெக்னிகள் விவரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.  வலைவீசினால் அவை எங்குமே கிடைக்கக்கூடியவைதான் அல்லவா?)

மேஷம்

ஆண்டு பிறக்கும்போது சின்னச்சின்ன டென்ஷன்கள் இருந்தாலும் ஜனவரி மத்தியிலிருந்தே “அட.. பிரச்சினைங்க குறையுதே.. பயந்த அளவு உடல் நிலை படுத்தலையே!’ என்ற சந்தோஷமும் சர்ப்பிரை சும் உண்டாகும். குழந்தைங்க ஆசையாய் அன்பாய் இருப்பாங்க. நீங்க குழந்தைங்களா? அப்ப பெத்தவங்களுக்கு டென்ஷன் குடுக்கக்கூடாது என்று உறுதியா இருங்க. எனஃப்.

பிப்ரவரி முதல்

பிசினஸ் செய்பவதரா நீங்க? நஷ்டங்களை இனி  சரி செய்துடுவீங்க.  கலைத்துறையில் சுமாராய்த் தத்தளிச்சுக்கிட்டிருந்தவங்க உறுதியாக் கால் பதிப்பீங்க. புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.. புது முதலீடு செய்வீர்கள்.  என்றைக்கோ உங்களைவிட்டுப் பிரிஞ்சு போனவங்க வெள்ளைக் கொடியை அசைச்சுக்கிட்டு உங்களைத் தேடி வருவாங்க. எந்த உழைப்பும் வீண் போகாது.

மே மாதம் முதல்

வயிறு சம்பந்தமான டென்ஷன்கள் வராம பார்த்துக்குங்க. வந்துவிட்டால் புயல் வேகத்தில் டாக்டர்கிட்ட போயிடுங்க. சின்ன சைஸ் பிரச்சினைதானே என்று அலட்சியம் கிலட்சியம் வேணாங்க. உங்களின் ராசியைச் சந்திரனும் சுக்கிரனும் பார்க்கும் வேளையில் இந்தாண்டு பிறப்பதால் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். எல்லாரும் உங்களைத் திரும்பிப் பார்ப்பாங்க. செல்வாக்கு என்ற சமாசாரம் அதிகரிக்கும்.

நவம்பர் முதல்

சூப்பர் திருப்பங்கள். எதிர்பார்த்திருக்காத நன்மைகள் எல்லாமும் உங்களை காலிங்பெல் அடிச்சு கூப்பிட்டு உள்ளே வருமுங்க. கடந்த மாசத்துக்கசப்புகளெல்லாம் பால் பாயசமாய் மாறும். குட்லக். ஆரோக்யம் நல்லாயிடும். உறுதி.

ரிஷபம்

வருஷம் பிறக்கும்போதே சுபமான குரு பார்வை உங்க ராசிக்கு விழுந்தாச்சு, அட அட.,  இதைவிட வேற என்னங்க வேணும். குரு மட்டுமில்லாமல் புதனும் பார்க்கையில் வருடம் பிறந்திருப்பதால் எல்லா வகைகளிலும் நலங்கள் நடக்கும். புதன் உங்களின் கல்வியை மேம்படுத்துவான். புத்திசாலித்தனத்தான்  சாதனைகள் செய்வீங்க. பணம் வந்துகொண்டே இருக்கும்.

பிப்ரவரி முதல்

இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெற்றோர் வகையிலும் மனைவி/ கணவரைப் பெற்றவர்கள் வகையிலும் நன்மையும்  மகிழ்ச்சியும் பெருகுமுங்க. சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  பிரபலமான துறைகளில் கால்வைக்க வாய்ப்புண்டு

மே மாதம் முதல்

அலுவலகத்தில் சில காலம் சின்ன டென்ஷன்கள் இருந்திருக்கும். எல்லாவற்றிற்றும் முற்றுப் புள்ளிதான், அலுவலகம் சம்பந்தமான பயணம் பற்றி என்ன விரும்பினீர்களோ அப்படியே நடக்குங்க. திருமணத்துக்குக் காத்திருந்தீங்களா? திருமணமாகிக் குழந்தை பிறக்கணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தீங்களா? கம் ஆன். இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத வருஷமாய் அமையப்போகுதுங்க. கங்கிராட்ஸ்.

நவம்பர் முதல்

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்ததே, அது பற்றி உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். பாக்கி தொகைகள் தொகை கைக்கு வரும்.

மிதுனம்

உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை  மட்டுமின்றி உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதையும் அளந்து உணர்ந்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை மாத்திக்கு வீங்க.  பிள்ளைகளால் உங்களுக்குள்ள மதிப்பும், மரியாதையும், புகழும் அதிகமாகும். உறவினர்கள், நண்பர்கள்   மற்றும்  அக்கம் பக்க்ததினர் மத்தியில் அந்தஸ்து உயரும். எதையும் தன்னம்பிக்கை யுடன் செய்யத் தொடங்கிட்டீங்க. பிறகென்னங்க. வெற்றிதான்.

பிப்ரவரி முதல்

சற்றே ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டீங்கன்னா போதுங்க. பெஸ்ட் இயர்னு இதை நீங்க மாத்திக்க முடியும். எந்தச் செயல்பாட்டையும் நல்லா யோசிப்பது மட்டுமின்றி உங்க நலம் விரும்புபவர்களின் அட்வைஸ் கேட்டு அதன்படி நடங்க. அதைவிட உங்களுடைய வழக்கமான ஜோசியர் கிட்ட கோண்டு போய் உங்க ஜாதகத்தைக் காண்பித்து அவர் அறிவுரைப்படி நடங்க. இப்போ உங்க தசையும் புக்தியும் நல்லா இருந்துச்சின்னா உங்களை யாராலும்  வெல்ல முடியாது.

மே மாதம் முதல்

குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  நல்லதுதாங்க. அது அவங்களுக்கும் சந்தோஷம் தரும். எனினும் அது நியாயமான வழிதானா என்று நல்லா யோசிச்சுத் தேர்ந்தெடுங்க. கெட்ட நண்பர்களை எல்லையைவிட்டே தள்ளி வையுங்க. உங்களின தோற்றப்பொலிவு கூடும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். ஜாலிதான்.

நவம்பர் முதல்

நேர்மறை எண்ணங்கள் உங்களை ஆக்கிரமித்து நல்வழிப்படுத்தும். . உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லதுங்க. கேர்ஃபுல்.

தொடரும்…

(கடகம், சிம்மம், கன்னி – நாளை-…)