2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்: கடகம், சிம்மம், கன்னி! கணித்தவர்: வேதா கோபாலன்

வணக்கங்க. இந்த வருஷம் நல்லாத்தான் பிறந்திருக்கு. எப்படி என்கிறீர்களா?  வருஷம் பிறந்த ஜாதகத்தைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போவீங்க. பலருக்கு நல்ல வேலை கிடைக்கும். ரொம்ப காலமாய்த் தள்ளிப்போன விஷயங்கள் நடக்கும். குறிப்பாய் மேரேஜ் நடந்துவிடும்.

நாடு சுபிட்சமான பாதையில் போகும். சூப்பர் மழை என்று சொல்ல முடியாது என்றாலும் மோசமில்லை. அரசியல்ல எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராததை எதிர்பாருங்க.

எனினும் எது எப்போ நடக்கும்னு தெரியணும்ல? குறிப்பா ராகு பெயர்ச்சி குரு பெயர்ச்சி என்று இரண்டு  மேஜர் சம்பவங்கள் இருக்கே இந்த வருஷம். அதன்படி எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்த்துடுவோமா?

எது எப்படியானாலும் இதெல்லாம் கோள்சாரப்பலன்கள் தாங்க. உங்க ஜாதகத்தை ஒரு எக்ஸ்பர்ட் ஜோதிடர் புரட்டிப்பார்த்துச் சொல்லக்கூடிய பலன்கள்தான் அதிக வெயிட்டாய் இருக்கும்.

அதாவது சந்திரன் நின்ற இடத்திலிருந்து எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்வது பொதுவான ராசிபலன். நீங்கள் பிறந்த வேளையில் எந்தெந்த கிரகம் எங்கெங்கே இருந்தன? இப்போதுள்ள தசா புக்திகள் என்னென்ன?  இவையெல்லாம் உங்கள் வாழ்வை இன்னும் துல்லியமாய்த் தீர்மானிக்கம் என்று சொல்லிக்கொண்டு..

2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்… கடகம், சிம்மம், கன்னி

(சொற்சிக்கனம் மற்றும் சுவாரஸ்யம் கருதி, கிரக சஞ்சார ராசிகள்… அதிசாரம்.. பெயர்ச்சி தினங்கள் போன்ற டெக்னிகள் விவரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.  வலைவீசினால் அவை

கடகம்

ராசிக்கு குரு பார்வை உள்ளது மட்டுமில்லீங்க… சுக்கிரனும் சந்திரனும் உங்களின் ராசிக்குச் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வருஷம் பிறப்பது ஜாக்பாட் மாதிரி.  ஏற்கனவே உள்ள அத்தனை பிரச்சினைகளும் படிப்படியாய்க் குறைந்து மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சியைப்பரப்பும்.

பிப்ரவரி முதல்

குழந்தைங்க சின்ன டென்ஷன் பண்ணினால் அது ஜஸ்ட் மிகவும் டெம்ப்ரரி விஷயம்னு நல்லா நினைவில் வெச்சுக்குங்க. சில மாசங்களில் சாதனைகள் செய்து உங்களைப் பெருமை நதியில் தள்ளுவாங்க. வீடு கட்டப்போறீங்க. அல்லது ஃப்ளாட் வாங்கப் போறீங்க,, குறைந்தது வாகனமாவது வாங்குவீங்க.. லோன் கிடைக்கும்.

மே மாதம் முதல்

பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் இயல்பாவே இருந்தாலும்  இப்போ இன்னும் அதிகரிக்கு முங்க. முக்கியமான  சாதனை என்ன தெரியுமா? உங்களின் பிரசித்தி பெற்ற கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கவலைப்படாதீங்க. சமாளிப்பீங்க. கணவர் (அ) மனைவி ஆதரவாகப் பேசுவார். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். நினைத்ததை முடிச்சுடுவீங்க. சாதனைதான்.

நவம்பர் முதல்

புண்ணியஸ்தலங்கள் விசிட் செய்வீங்க. ஷேர்-மார்க்கெட் போன்றவை மூலம் பணம் வரும்.

சிம்மம்

சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள்.     அது உங்களை இன்னும் புடம்  போட உதவும். வருஷம் முழுக்க குரு பகவான் மாற்றி மாற்றி நல்ல இடங்களிலேயே வாக்கிங் போய்க்கொண்டிருப்பதால் தப்பிச் சீங்க. போதுங்க.. கடந்த ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டப்பட்ட உங்களுக்கு சிறப்பான வருஷம் என்ற ஒரு பரிசு வேண்டாமா? அதுதான் இது.

பிப்ரவரி முதல்

எதிலும் ஒரு மனத் தெளிவு பிறக்குமுங்க. கணவரின்/ மனைவியின் ஆரோக்கியம்  போன வருஷம் ரொம்பவும் டென்ஷன் கொடுத்தது அல்லவா? அது இப்ப சீராகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மே மாதம் முதல்

உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்  என்றாலும் எதிர்பாராத இடத்துக்குக் கிடைக்கும் என்பதால் மனசைத் தயார் நிலையில் வெச்சுக் குங்க. எது எப்படியானாலும் கடந்த ஆண்டுகளைவிட இ4நத ஆண்டு மேலதிகாரிகளின் கருணைப்பார்வை  கிடைக்கும்.

நவம்பர் முதல்

பிசினஸ் செய்பவர்கைள் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீங்க. வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். இருந்தாலும்கூட  வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.  திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு மங்களகரமாக விளங்கும். பிசியான வருஷங்க.

கன்னி

2019-ம் ஆண்டு உங்களுக்குச் சிறந்த வளர்ச்சியைத் தரும். உத்தி யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் உங்களை ஒரு வழியாப் புரிஞ்சுப்பாங்க. உங்க ராசிநாதன் புதன் மட்டுமின்றி, இரண்டு ஒன்பதுக்குரிய சுக்கிரனும் சூப்பராக இருக்கும்நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் நிறைந்த நன்மைகள் உத்தரவாதம்.  ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

பிப்ரவரி முதல்

அம்மாவால் மட்டுமின்றித் தாய் வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டு. பாட்டியின் சொத்து அல்லது நகைகள் கிடைக்கக்கூடும். உங்கள் கை ஓங்கும். நெருங்கிய உறவினர்கள்/ கணவர்/ மனைவி/ குழந்தைககளின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை நல்வழிப்படுத்தி நிம்மதி காண்பீங்க.

மே மாதம் முதல்

பிசினஸ் செய்துக்கிட்டிருந்தவங்க பல காலம் தேங்கியிருந்த பழைய சரக்குகளைத் நல்ல விலையில் விற்று முடிப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் பிசினஸ் செய்ய வாய்ப்பு வரும். அது வெற்றிகரமாகும். எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். தவிர இழுத்துப் பறிச்சுக்கிட்டிருந்த கேஸ்கள் நல்லபடியா முடியும். பாஸ்போர்ட் /விசா கிடைக்கும்.

நவம்பர் முதல்

பேச்சினால் நன்மையும் லாபமும் வரும். குழந்தைங்க நல்ல வகையில் உங்களுக்கு உதவுவதுடன் பெருமிதம் தருவாங்க. புது வீடு கட்டுவீங்க. அல்லது இருக்கும் வீட்டை எக்ஸ்டன்ட் செய்து நவீனமாக்குவீங்க.  சந்தோஷம் தரும் வருஷங்க. ஜாலியாப்போகும்.  குட்லக்.

தொடரும்…

நாளை (துலாம், விருச்சிகம், தனுசு(

 

கார்ட்டூன் கேலரி