2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்: மகரம், கும்பம், மீனம்! கணித்தவர்: வேதா கோபாலன்

வணக்கங்க. இந்த வருஷம் நல்லாத்தான் பிறந்திருக்கு. எப்படி என்கிறீர்களா?  வருஷம் பிறந்த ஜாதகத்தைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போவீங்க. பலருக்கு நல்ல வேலை கிடைக்கும். ரொம்ப காலமாய்த் தள்ளிப்போன் விஷயங்கள் நடக்கும். குறிப்பாய் மேரேஜ் நடந்துவிடும்.

நாடு சுபிட்சமான பாதையில் போகும். சூப்பர் மழை என்று சொல்ல முடியாது என்றாலும் மோசமில்லை. அரசியல்ல எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராததை எதிர்பாருங்க.

எனினும் எது எப்போ நடக்கும்னு தெரியணும்ல? குறிப்பா ராகு பெயர்ச்சி குரு பெயர்ச்சி என்று இரண்டு  மேஜர் சம்பவங்கள் இருக்கே இந்த வருஷம். அதன்படி எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்த்துடுவோமா?

எது எப்படியானாலும் இதெல்லாம் கோள்சாரப்பலன்கள்தாங்க. உங்க ஜாதகத்தை ஒரு எக்ஸ்பர்ட் ஜோதிடர் புரட்டிப்பார்த்துச் சொல்லக்கூடிய பலன்கள்தான் அதிக வெயிட்டாய் இருக்கும்.

அதாவது சந்திரன் நின்ற இடத்திலிருந்து எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்வது பொதுவான ராசிபலன். நீங்கள் பிறந்த வேளையில் எந்தெந்த கிரகம் எங்கெங்கே இருந்தன? இப்போதுள்ள தசா புக்திகள் என்னென்ன?  இவையெல்லாம் உங்கள் வாழ்வை இன்னும் துல்லியமாய்த் தீர்மானிக்கம் என்று சொல்லிக்கொண்டு..

 இதோ பொதுப்பலன்கள்…

(சொற்சிக்கனம் மற்றும் சுவாரஸ்யம் கருதி, கிரக சஞ்சார ராசிகள்… அதிசாரம்.. பெயர்ச்சி தினங்கள் போன்ற டெக்னிகள் விவரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.  வலைவீசினால் அவை எங்குமே கிடைக்கக்கூடியவைதான் அல்லவா?)

மகரம்

இந்த ஆண்டு உங்களுக்குப் பத்தாவது ராசியில் பிறந்திருக்குங்க. கூடவே துணைக்கு மிஸ்டர் சுக்கிரன் உட்கார்ந்திருக்கார். அதிலும் தனது பலமான வீட்டில் உட்கார்ந்திருக்காருங்க. மேற்கத்திய நாடு களில் வேலை கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவங்க ஜமாய்க் கப்போறீங்க. நீங்களும் வெளிநாட்டுக்கெல்லாம் டூர் போவீங்க. புதிய முன்னேற்றங்கள் இருக்கும்.

பிப்ரவரி முதல்

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டில் சில  அறைகளை மாற்றியும் இடித்தும் கட்டி நவீன மயமாக்குவீங்க. உங்களின் பல கால எதிர்பார்ப்புகள்  நல்ல முறையில் நிறைவேறும். நீங்க ரொம்ப காலமா எதிர்பார்த்திருந்த தொகை ஒன்று கைக்கு வரும். அது அநேகமாய்ப் பெரிய தொகையாய் இருக்கும். கணவரின் / மனைவியின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீங்க. ஒரு வேளை நீங்க வங்கியிலோ வேறு இடத்திலோ  வீட்டை  அடமானமாக வைத்திருந்தால் அந்தக் கடனை அடைச்சு வீட்டுப் பத்திரத்தை மீட்டுவிடுவீர்கள்.  எந்த விஷயத்திலுமே மனசில் உற்சாகம் பிறக்கும்.

மே மாதம் முதல்

வெகு காலமாய் உங்களை டென்ஷன் செய்துக்கிட்டிருந்த பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். ஏங்கிக் காத்துக்கிட்டிருந்த மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறுவதால் படிப்பில்/ உத்யோகத்தில்/ தொழிலில் நாட்டம் கூடும். உங்களுக்கு  சந்தோஷம்.

நவம்பர் முதல்

திடீர் யோகமும் திருப்பமும் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சமூகத்தில்/ கிளப்புகளில் கெளரவப் பதவி கிடைக்குங்க.

கும்பம்

உங்கள் ராசிக்குச் சந்திரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறக்குதுங்க. மனசில் இருந்த குழப்பங்கள் டாட்டா காண்பிச்சு மன உறுதியும் தன்னம்பிக்கையும் பிறக்கும். சுக்கிரனும் அந்த வீட்டில் இருப்பதால் பணம், புகழ் அந்தஸ்த்துன்னு எல்லாமும் உங்களைத் தேடி வரும். குறிப்பா.. நீங்க கலைத்துறையில் இருக்கறவங்க என்றால்.. நீங்கள் சார்ந்த துறையில் உச்சிக்குப்போவீங்க.

பிப்ரவரி முதல்

இத்தனை மாசமாய் எவ்ளோ உழைச்சாலும் பலன் இல்லை என்று நொந்து போயிருந்தீங்கதானே? இனி, ஒரு வழியா உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். இத்தனை நாட்களாகக் கலங்கிப்போயிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். நீங்க எதிர்பார்த்திருந்த இடத்திலிருந்து பணவரவு அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கு அலுவலகக் காரணங்களுக்கோ இல்லை பர்சனல் காரணங்களுக்கோ சென்று வருவீர்கள்.

மே மாதம் முதல்

உங்கள் உடல்நலனில் மட்டுமல்லாமல் தாயாரின் கவனமாக இருப்பது நல்லது. பேச்சு விஷயத் தில் மிகவும் ஜாக்கிரதையா இருந்தால் உங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இருக்கவே இருக்காது. எப்போதும் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள். அது போதும். கணவரிடம் அல்லது மனைவியிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு

நவம்பர் முதல்

புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கடனாக வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீங்க.

மீனம்

சவால்களில் வெற்றி பெறுவீங்க. சோதனைகளையெல்லாம் வென்று சாதனைகளாக்குவீங்க. பல காலமாக நிலுவையில் இருந்த வழக்கு உங்களுக்குச் சாதகமாக முடியும். குட் நியூஸ் நிறைய உண்டுங்க. நீங்கள் பலகாலமாகப் போட்டிருந்த புதிய திட்டங்கள் இந்த வருஷம் நிறைவேறும். உங்களை அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்துவாங்க.  அரசாங்க உயர் மட்டத்தில் உள்ளவங்க நிறையப் பொருமிதங்களைச் சந்திருப்பீங்க.
பிப்ரவரி முதல்

நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் வியாபாரத்தில் நுணுக்கங்களையெல்லாம் புரிந்துகொள்வீர்கள். கடையை / வியாபாரத் தலரத்தை விரிவுபடுத்தி அழகாகவும் கட்டி முடிப்பீங்க. சுருங்கச் சொன்னால் உங்களின் லாபம் உயரும். மாச சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர் எனில் சம்பளம் மட்டுமின்றிப் பதவியும் கௌரவமும்கூட அதிகரிக்கும்.

மே மாதம் முதல்

உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு முன்னெப்போதையும்விடத் திருப்தியும் சந்தோஷ மும் தரும். ஆனால், கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். அதனால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயத்தில் ஈடுபாடும் பிடித்தமும் வந்துவிட்டால் அசராமல் உழைத்து ஜமாய்ப்பவராயிற்றே நீங்க. திடீர் திடீர் என்று பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். அனேகமாக அது வெளிநாட்டுப் பயணமாகத்தான் இருக்கும். குறிப்பா அலுவலகவாசிகளு இது நேர்வதற்கு மிக அதிகமாக சாத்தியக்கூறுகள் உள்ளன.

நவம்பர் முதல்

அலைச்சலும் உழைப்பும் நன்மை தரும். உறவினர்களுடன் கூடி மகிழ்வீங்க. குறிப்பா மகனும் மகளும் அவங்க குடும்பமும் அனுசரணையா இருப்பாங்க.

முற்றும்.