2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்: துலாம், விருச்சிகம், தனுசு! கணித்தவர்: வேதா கோபாலன்

வணக்கங்க. இந்த வருஷம் நல்லாத்தான் பிறந்திருக்கு. எப்படி என்கிறீர்களா?  வருஷம் பிறந்த ஜாதகத்தைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போவீங்க. பலருக்கு நல்ல வேலை கிடைக்கும். ரொம்ப காலமாய்த் தள்ளிப்போன விஷயங்கள் நடக்கும். குறிப்பாய் மேரேஜ் நடந்துவிடும்.

நாடு சுபிட்சமான பாதையில் போகும். சூப்பர் மழை என்று சொல்ல முடியாது என்றாலும் மோசமில்லை. அரசியல்ல எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராததை எதிர்பாருங்க.

எனினும் எது எப்போ நடக்கும்னு தெரியணும்ல? குறிப்பா ராகு பெயர்ச்சி குரு பெயர்ச்சி என்று இரண்டு  மேஜர் சம்பவங்கள் இருக்கே இந்த வருஷம். அதன்படி எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்த்துடுவோமா?

எது எப்படியானாலும் இதெல்லாம் கோள்சாரப்பலன்கள்தாங்க. உங்க ஜாதகத்தை ஒரு எக்ஸ்பர்ட் ஜோதிடர் புரட்டிப்பார்த்துச் சொல்லக்கூடிய பலன்கள்தான் அதிக வெயிட்டாய் இருக்கும்.

அதாவது சந்திரன் நின்ற இடத்திலிருந்து எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்வது பொதுவான ராசிபலன். நீங்கள் பிறந்த வேளையில் எந்தெந்த கிரகம் எங்கெங்கே இருந்தன? இப்போதுள்ள தசா புக்திகள் என்னென்ன?  இவையெல்லாம் உங்கள் வாழ்வை இன்னும் துல்லியமாய்த் தீர்மானிக்கம் என்று சொல்லிக்கொண்டு..

 இதோ பொதுப்பலன்கள்…  துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…..

(சொற்சிக்கனம் மற்றும் சுவாரஸ்யம் கருதி, கிரக சஞ்சார ராசிகள்… அதிசாரம்.. பெயர்ச்சி தினங்கள் போன்ற டெக்னிகள் விவரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.  வலைவீசினால் அவை எங்குமே கிடைக்கக்கூடியவைதான் அல்லவா?)

துலாம்

செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கு. உங்களுக்கு சாலஞ்ச் செய்த விஷயங்களை உங்களின் புத்திசா லித்தனத்தாலும் சமயோசிதத்தாலும் எல்லாத்தையும்விட உங்க வாதத் திறமையாலும் முடிப்பீங்க. நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அம்புட்டும் அதிகரிக்குமுங்க. போன வருஷம் முழுக்கத்  தடை பட்டிருந்த வேலைகள் முடியும். குறிப்பா வீடு ரெஜிஸ்ட்டிரேஷன் போன்றவை…

பிப்ரவரி முதல்

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. குறிப்பா அரசு உத்யோகம்.. வங்கி வேலை போன்றவற்றிற்குக் காத்திருந்தவங்களுக்கு குட் நியூஸ் உண்டு. பல காலம் முகத்தைத் திருப்பிக்கிட்டிருந்த உறவினர்கள் தேடி வருவாங்க.. கை வசம் முன்பைவிடப் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவு கூடும். சில வேலைகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பீங்க. அதுதாங்க  கரெக்ட். குழந்தைங்களை அதீதமாய் அடக்கி ஆளாதீங்க. அவங்க செய்வது சரியான பாதையில்தான் போயிக்கிட்டிருக்கு.

மே மாதம் முதல்

வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார யுக்திகளைப் புதிதாகச் செய்வீங்க. தவிர  புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். குறிப்பாய் உங்க விளம்பரப் பாணி மாறி உங்களை உயரத்துக்குக் கொண்டு போகும். உத்யோகத்தில் உள்ளவங்க நல்ல செய்தியைக் கட்டாயம் எதிர்பார்க்கலாமுங்க.

நவம்பர் முதல்

பதவி உயரும். சம்பளம் உயரும்.. வேறு நல்ல வாய்ப்புகளும் அமையும். உத்யோகம் மாறுவீங்க. ஜமாய்ப்பீங்க.

விருச்சிகம்

போன வருஷம் இழந்த செல்வாக்கை இந்த வருஷம் மீண்டும் பெறுவீங்க. அலுவலகத்திலும் சமுதாயத்திலும் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீங்க. அதுக்கு உங்க கடுமையான உழைப்பும் முயற்சியும் உதவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் அதற்குள் உன்பாடு என்பாடு என்றாகிவிடும். அதனால் என்னங்க. முடிவு சுபம். அதுதானே நாம வேண்டுவது!

பிப்ரவரி முதல்

புதுப்புது  டிசைன்களில் நகைங்களும் ஆடை அணி மணியும் (அதாங்க டிரஸ்ஸூங்க.. சேலை) வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். ரொம்பக் காலமாய்ப் பழசாகி உபயோகம் குறைந்து கிடந்த வாகனத்தையெல்லாம் மாற்றிப்புதுசு வாங்குவீங்க. அதுவும் சாதாரண வண்டி வாகனங்களெல்லாம் இல்லைங்க. சூப்பரா நீங்க கனவு கண்டுட்ககிட்டிருந்தீங்களே. அந்த வாகனம்.

மே மாதம் முதல்

நீங்கள் ஆணாய் இருந்தால் தோழிகளால் உதவிகள் கிடைக்கும். பெண்ணாய் இருந்தால் தோழர்கள் பெரும் உதவி  செய்வாங்க. அதிலும் வாழ்வையே திசை திருப்பக்கூடிய நல்ல உதவியா இருக்குங்க.  சொத்துகள் வாங்குவீங்க.  முன்னோர்களின் சொத்துகள் உங்க அட்ரஸ்ஸைத் தேடி வருவதற்கும் சான்ஸ் இருக்கு.

நவம்பர் முதல்

செம ஜாக்பாட்தான் இனி. குடும்பத்தில் ஹாப்பி ஹாப்பி செய்திகள் வரும். கல்யாணமே ஆகாதோ என்று பயந்த ஒருவருக்குக் குடும்பத்தில் படு கிராண்ட் கல்யாணம் நடந்து குடும்பத்தையே குதூகலிக்க வைக்கப்போகுது பார்த்துக்கிட்டே இருங்களேன். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கப்பாருங்க. ப்ளீஸ்.

தனுசு

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது பிறக்குதுங்க. தாயாரின் உதவியும் அனுசரணையும் கண்டிப்பாக கிடைக்கும். ஜில்லுன்னு உள்ள வெளிநாடுகளில் வேலைகிடைக்கும்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு குலாப் ஜாமூன் செய்தி வரும் (சரி உங்களுக்குப் பிடிச்ச எந்த ஸ்வீட் பெயரை  வேணும்னாலும் இந்த இடத்தில் போட்டுக்குங்க.

பிப்ரவரி முதல்

உறவினர்கள், தோழிகள் மத்தியில் மட்டுமில்லாம அலுவலகத்திலும் உங்களுடைய அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீங்க. உங்களுக்கு ஓய்வெடுக்கவே நேரமிருக்காதுங்க. அந்த அளவுக்கு  அடுத்தடுத்து வேலைகளும் பயணங்களும் தொடர்ந்துகொண்டே போகும். சாப்பிடவும் தூங்கவும் நேரத்தைத் திருட வேண்டியிருக்கும். எதிலும் ஆர்வம் பிறக்கும்.  சோர்வும் சோகமும் சோம்பலும் காணவே காணாமல் பறந்தோடிவிடும்.

மே மாதம் முதல்

முன்பின் தெரியாதவர்களை தயவு  செய்து நம்பவே நம்பாதீங்க. அவங்க கிட்ட கடகடன்னு அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அவங்களா போட்டு வாங்க முயற்சி செய்தாலும் ஜஸ்ட் கேட்டுக்குங்க.  சொல்லாதீங்க. சொத்து வாங்க ஏற்பாடுகள் நடக்கும். அதற்கான முன்பணம் தருவீர்கள்.  அது கடைசியில் நல்லபடியாக முடிந்து சொத்து எந்த வில்லங்கமும் இல்லாமல் உங்களுடையதாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

நவம்பர் முதல்

புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் குழந்தை பாக்கியம் உண்டு.

தொடரும்…

(நாளை – மகரம், கும்பம், மீனம்)