12 ராசிகளுக்கான 2020ம் ஆண்டு பொதுப்பலன்கள்! கணித்தவர்: வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி நாளை பிறக்கிறது. இந்த முறை புத்தாண்டு கும்ப ராசியில் பிறப்பதால் நாட்டில் சுபிட்சம் நிலவும் என்றும், ஆட்சியாளர்கள், மக்கள் அனைவருக்குமே இது சுபிட்சமான ஆண்டு என்றும் ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்…  

நமது பத்திரிகை.காம் இணைய இதழுக்காக பிரபல ஜோதிடர் வேதா கோபாலன் 12 ராசிகளுக்கான பொதுப்பலன்களை துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் கணித்து வழங்கி உள்ளார். வாசகர்கள், தங்களது ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்   

இந்த 2020 ஆம் ஆண்டு நீங்க  குடும்பத்தினரின் மனமறிந்து செயல்பட்டு அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி நல்லபெயர் சம்பாதிச் சுடுவீங்க. பொருளாதாரம் நல்லபடியா அமையும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவாங்க. இதனால் மகிழ்ச்சி பொங்கும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். அதெல்லாம் சரிதான். ஆனாலும்.. புதியவங்களோ.. பழையவங்களோ… கொஞ்சம் ஜாக்கிரதையாப் பழகுவது நல்லதுங்க. மனசில் வைராக்கியம் அதிகமாகும். புதிய திட்டங்களை முயன்று பார்ப்பது பற்றி ஆர்வம் அதிகமாகுமுங்க. புதிசாக் கல்யாணம் ஆனவங்களுக்கு இந்த வருஷம் குழந்தை பாக்கியம் கிட்டும். அரசாங்க வழியில் வருட ஆரம்பத்திலேயே ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்:

டாடி மம்மி வகையில் சில அனுகூலமான பலன் உண்டுங்க. வெளியூர் அல்லது ஃபாரின்லேந்து நல்ல நியூஸ் வரும். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறையா யோசித்து அதன்பிறகு செயல்படுவது நல்லதுங்க. வருஷத்தின் முதல் பாதியில் எந்த விஷயத்திலும் யாரிடமும் ஜாக்கிரதையா இருங்க. எதையும் சந்தேகப்படுங்க. தப்பில்லை. ஆனா அதற்காக யார்கிட்டயும் கடுமையா நடந்துக்க வேணாங்க. உற்றார், உறவினர்களைப் பொருத்த வரையில்  உங்க முன்னேற்ற த்தைப் பார்த்து சிலர் சந்தோஷமும் சிலர் பொறாமையும் கொள்வாங்க. எதையும் மனசில் ஏத்துக்காம உங்க வேலையை கவனிச்சுக்கிட்டே போங்க.

மிதுனம்

பல வருஷமா ‘டல்’லாயிருந்த உங்க வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாக தொடங்கும். புதிய முயற்சிகள் ஓரளவுக்குதாங்க கைகொடுக்கும். ஆனா ஆஃபீஸ்ல உங்கள் செயல்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பா அலுவலகம் சம்பந்தமான வழக்குகள் உங்களுக் குத்தான் சாதகமா முடியும்.  வருட ஆரம்பத்தில் என்னடா இதுன்னு லேசான கவலையும் பயமும் இருக்கத்தாங்க செய்யும். ஆனால் போகப்போக லைட் போட்ட மாதிரி வாழ்க்கை பிரைட்டா ஆயிடும். இந்த வருஷம் இரண்டாம் பாதியில் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்த வர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகி ஒரு வழியா நிம்மதி கிடைக்கும். வீண் கோபத்தையும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்துடுங்க.

கடகம்

வருட ஆரம்பத்தில் புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். போகப் போக கவனமாய் இருக்கணும்.  திட்டமிடாது செய்யும் காரியங்களில் பெரிய வெற்றி எதிர்பார்க்க முடியாது என்றாலும் நல்லா யோசிச்சு எடுக்கும் முடிவுகள் நல்ல ரிசல்ட் தருங்க. குடும்பத்தில் சுபமான நல்ல செலவுகள் ஏற்படும். திரு மணம் போன்ற விஷயங்கள் வருடத்தில் இரண்டாம் பாதியில் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். உடன்பிறந்தவங்க கிட்ட இவ்ளோ காலமா இருந்து வந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கும். இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த நட்பு வட்டம் இன்னும் பெரிய அளவில் விரிவடையும். ஆனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு கொஞ்சம் கேர்ஃபுல்லா யோசிச்சு கவனமாய் இருந்துக்குங்க.

சிம்மம்

இந்த வருஷம் நீங்க வழக்கத்தைவிட அதிகச் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். ஆனா ஒரு விஷயத்தில் நீங்க சற்று கவனமாய் இருந்தே தீரணுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் யாரையும் நம்ப வேண்டாங்க. வாகனத்தில் போகும் போது ராக்கெட் வேகத்தில் போகாமல்  மித வேகத்தில் போவது நல்லதுங்க. யாருக்காகவும் சாட்சி கையெழுத்தோ அல்லது ஜாமீன் கையெழுத்தோ போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாங்க. குடும்பத்துல பெரியோர்களின் அன்பும், ஆசியும் உங்களுக்குக் கிடைக்கும் படி அவங்க கிட்ட நீங்க நல்லபடியா நடந்துக்குவீங்க. எனவே எப்போதும் மன அமைதி கிடைக்கும்.

கன்னி

உத்யோகத்தில் உங்க செல்வாக்கு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் உங்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் என்பதால் விழிப்புடன் கவன மாய்ச் செயல்படுவீங்க. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு வரும். அதில் தொண்டு செய்யவும் வாய்ப்பு வரும். போன வருஷம் மனசில்  இருந்த குழப்பங்களெல் லாம் டாட்டா காண்பிச்சு மனசில் ஒருவிதத் தெளிவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம். நம்பலாம். குடும்ப பிரச்சனை களுக்கு ஓர் ஃபுல் ஸ்டாப் வைச்சுடுவீங்க. அலுவலகத்தில்.. பள்ளியில்.. காலேஜில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியம் சீர் பெரும். பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்  ஒவ்வொன்றாய் நடக்கும். தள்ளிப் போயிக்கிட்டிருந்த கல்யாணங்களும், சுப நிகழ்ச்சிகளும்,  குல தெய்வ வழிபாடும் இந்த வருஷத்தின் இரண்டாம் பாதியில் நிறைவேறும். கணவன் மனைவிக் கிடையே இவ்ளோ காலமாய் இருந்து வந்த சின்னச்சின்ன சண்டைகள் விலகி.. சுமுகமான உறவு காணப்படுங்க. இதனால  இந்த வருஷம் நிம்மதியான வருஷம்னு நீங்க நம்பலாம். வீடு கட்டப் போறிங்களா.. சொத்து பிரியப்போகுதா..?  கூடப்பொறந்தவங்களோட ஆதரவை எதிர்பார்க்கலாம். கணவன் அல்லது மனைவி மூலம் ஏதோ ஒரு வகையிலாவது ஆதாயம் உண்டு. அது அக்டோபருக்குப் பிறகு ஏற்படும். ஆன்மிகத்தில் இன்டரெஸ்ட் அதிகரிக்குங்க. மனசுல புது உற்சாகம் ஏற்படும். எனவே வேலைகளைத் திருத்தமாய் செய்து நல்ல பெயர் எடுப்பீங்க.

விருச்சிகம்

மனைவி வழி அல்லது கணவன் வழி சொந்தங்களால உங்களுக்குச் சாதகமான பலனை அடைவீங்க. கடன் பிரச்சனை தீர புது வழி ஒன்று கிடைக்கும். அது நியாயமான வழிதானான்னு யோசிச்சு அதன்பிறகு அதுல இறங்கறது நல்லதுங்க. கடந்த பல வருஷங்களாய் மனசில் இருந்த டென்ஷனுங்க காணா மல்  போய் நிம்மதி நிலவும்.  குடும்பத்துடன் பல புண்ணிய  இடங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போயிட்டு வருவீங்க. உத்யோகத்தில் உங்கள் செயல் திறமை வெளிப்பட்டு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்குங்க. வேலை பார்க்கும் இடத்தில் உங்க கூட வேலை பார்க்கும் சக ஊழியர்களுடைய ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி போக வேண்டியிருக்கும். இதனாலகூடுதல் லாபம் கிடைக்குங்க..

தனுசு

அலுவலகத்தில்  உங்கள் பெயரை நல்லபடியாக் காப்பாற்றிக் கொள்ள  கொஞ்சம் லேசாப் போராட வேண்டியிருக்குங்க. ஸோ…. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருக்கறது நல்லது. அடுத்தவங்களுக்கு நீங்க நல்ல எண்ணத்தோட  செய்யும் உதவி சில நேரத்தில் பிரச்சனையில் முடிய சான்ஸ் இருக்கு. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். ஆனால் அதை இப்படி நல்ல கோணத்தில் யோசிச்சுப் பார்க்கலாமே? செலவுக்கு ஏற்ற வருமானம் வரும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட செலவுகள் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். வருட ஆரம்பத்தில் கொஞ்சம் டென்ஷன்ஸ் இருக்கு. அதைப் பற்றி அதிகம் கவலை வேண்டாம். போகப்போக சரியாகும்.

மகரம்

ஃப்ரெண்ட்ஸ்ஸால உதவி கிடைக்குங்க. . புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு.  பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருந்த உங்களுக்கு இந்த வருஷம் திருப்புமுனை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். குறிப்பா வருடத்தில் இரண்டாம் பகுதியில்  மனசில் உறுதியும் செயல் களில் சுறுசுறுப்பும் உண்டாகும். தொழில் அண்ட் உத்யோகத்தை நீங்க ரொம்ப வும் கவனமாய்ச் செய்யப்போறீங்க. எனவே லாபமும் பாராட்டும் உண்டு. போதாக்குறைக்கு உறவினர் களின் பரிபூர்ண ஆதரவும் கிடைக்கும். பணம் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகுங்க.  உங்க அத்தியாவசிய தேவைகள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பிக்கும்.  குடும்பத்தில் சுப விரயங்களும், வீண் விரயங்களும் மிக்ஸட்டா உண்டுங்க. சமாளிச்சுடுவீங்க.

கும்பம்

குடும்பத்தில் சுமைகள் அதிகரிக்கும். ஆனால் வருடக் கடைசியில் அதை யெல்லாம் பொருட்படுத்த வேண்டாதபடி மீண்டு மகிழ்ச்சியை எட்டுவீங்க. உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெறவும் முடியும். ஆனால் இந்த உயரத்தை எட்டுவதற்கு நீங்க கொஞ்சம் அதிகமாய் மெனக்கெடுவீங்க. செலவுகள் இருந்தாலும் அதெல்லாம் சூப்பர் செலவுங்களா இருக்கும். நீங்க செலவு செய்து முடிச்சுத் திரும்பினா வருமானம் காத்திருக்கும். உங்களோட அருமைங்களையும் பெருமைங்களையும் புரிஞ்சுக்கிட்டுப் பலரும் உங்களை நாடி வருவாங்க. அடுத்தவங்களுக்காக உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். வருட ஆரம்பத்தில் ஏராளமான லாபங்கள்  அல்லது வருமானங்கள் வரும்.

மீனம்

குடியிருக்கும் வீட்டைப் புதுப்பிச்சுக் கட்டவோ அல்லது வேறு அழகான வீட்டுக்கு மாற்றிக்கொண்டு போகவோ  சான்ஸ் வருங்க. இந்த வருடம் இரண் டாம் பகுதியில் அதிகப் பணம் எப்போதும் கையில் புரளும். குடும்ப நபர்கள் அதிகரிப்பாங்க. உங்க வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பலகாலம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் காணாமல் போகும். அம்மாவுக்கு வருட ஆரம்பத்தில் சின்ன பிரச்சினைகளோ சுகவீனங்களோ இருந்தால் டோன்ட் ஒர்ரி.  வருட மத்திய பாகத்திற்குப்பிறகு  நல்லாயிடுவாங்க.

இந்த புத்தாண்டில் வாசகர்களின்  அனைத்து முயற்சிகளும்வெற்றி பெற்று வாழ்வில் சிறந்து விளங்க பத்திரிகை டாட் காம் வாழ்த்துகிறது…

கார்ட்டூன் கேலரி