2020ம் ஆண்டு ராசிக்கான பொதுப்பலன்-2: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்! வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ராசிகளின் பொதுப்பலன்களை பிரபல ஜோதிடர்  வேதா கோபாலன்  துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் கணித்து வழங்கி உள்ளார். வாசகர்கள், தங்களது ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்

இந்த வருஷம் நீங்க வழக்கத்தைவிட அதிகச் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். ஆனா ஒரு விஷயத்தில் நீங்க சற்று கவனமாய் இருந்தே தீரணுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் யாரையும் நம்ப வேண்டாங்க. வாகனத்தில் போகும்போது ராக்கெட் வேகத்தில் போகாமல்  மித வேகத்தில் போவது நல்லதுங்க. யாருக்காகவும் சாட்சி கையெழுத்தோ அல்லது ஜாமீன் கையெழுத்தோ போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாங்க. குடும்பத்துல பெரியோர்களின் அன்பும், ஆசியும் உங்களுக்குக் கிடைக்கும்படி அவங்க கிட்ட நீங்க நல்லபடியா நடந்துக்குவீங்க. எனவே எப்போதும் மன அமைதி கிடைக்கும்.

கன்னி

உத்யோகத்தில் உங்க செல்வாக்கு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் உங்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் என்பதால் விழிப்புடன் கவனமாய்ச் செயல்படுவீங்க. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு வரும். அதில் தொண்டு செய்யவும் வாய்ப்பு வரும். போன வருஷம் மனசில்  இருந்த குழப்பங்க ளெல்லாம் டாட்டா காண்பிச்சு மனசில் ஒருவிதத் தெளிவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம். நம்பலாம். குடும்ப பிரச்சனைகளுக்கு ஓர் ஃபுல் ஸ்டாப் வைச்சுடுவீங்க. அலுவலகத்தில்.. பள்ளியில்.. காலேஜில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியம் சீர் பெரும். பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்  ஒவ்வொன்றாய் நடக்கும். தள்ளிப் போயிக்கிட்டிருந்த கல்யாணங்களும், சுப நிகழ்ச்சிகளும்,  குல தெய்வ வழிபாடும் இந்த வருஷத்தின் இரண்டாம் பாதியில் நிறைவேறும். கணவன் மனைவிக் கிடையே இவ்ளோ காலமாய் இருந்து வந்த சின்னச்சின்ன சண்டைகள் விலகி.. சுமுகமான உறவு காணப்படுங்க. இதனால  இந்த வருஷம் நிம்மதியான வருஷம்னு நீங்க நம்பலாம். வீடு கட்டப் போறிங்களா.. சொத்து பிரியப்போகுதா..?  கூடப்பொறந்தவங்களோட ஆதரவை எதிர்பார்க்கலாம். கணவன் அல்லது மனைவி மூலம் ஏதோ ஒரு வகையிலாவது ஆதாயம் உண்டு. அது அக்டோபருக்குப் பிறகு ஏற்படும். ஆன்மிகத்தில் இன்டரெஸ்ட் அதிகரிக்குங்க. மனசுல புது உற்சாகம் ஏற்படும். எனவே வேலைகளைத் திருத்தமாய் செய்து நல்ல பெயர் எடுப்பீங்க.

விருச்சிகம்

மனைவி வழி அல்லது கணவன் வழி சொந்தங்களால உங்களுக்குச் சாதகமான பலனை அடைவீங்க. கடன் பிரச்சனை தீர புது வழி ஒன்று கிடைக்கும். அது நியாயமான வழிதானான்னு யோசிச்சு அதன்பிறகு அதுல இறங்கறது நல்லதுங்க. கடந்த பல வருஷங்களாய் மனசில் இருந்த டென்ஷனுங்க காணாமல்  போய் நிம்மதி நிலவும்.  குடும்பத்துடன் பல புண்ணிய  இடங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போயிட்டு வருவீங்க. உத்யோகத்தில் உங்கள் செயல் திறமை வெளிப்பட்டு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்குங்க. வேலை பார்க்கும் இடத்தில் உங்க கூட வேலை பார்க்கும் சக ஊழியர்களுடைய ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி போக வேண்டியிருக்கும். இதனாலகூடுதல் லாபம் கிடைக்குங்க..

தொடரும்…

நாளை – தனுசு, மகரம், கும்பம் மீனம்…

கார்ட்டூன் கேலரி