2020ம் ஆண்டு ராசிக்கான பொதுப்பலன்-3: தனுசு, மகரம், கும்பம், மீனம்! வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ராசிகளின் பொதுப்பலன்களை பிரபல ஜோதிடர்  வேதா கோபாலன்  துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் கணித்து வழங்கி உள்ளார். வாசகர்கள், தங்களது ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தனுசு

அலுவலகத்தில்  உங்கள் பெயரை நல்லபடியாக் காப்பாற்றிக் கொள்ள  கொஞ்சம் லேசாப் போராட வேண்டியிருக்குங்க. ஸோ…. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருக்கறது நல்லது. அடுத்தவங்களுக்கு நீங்க நல்ல எண்ணத்தோட  செய்யும் உதவி சில நேரத்தில் பிரச்சனையில் முடிய சான்ஸ் இருக்கு. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். ஆனால் அதை இப்படி நல்ல கோணத்தில் யோசிச்சுப் பார்க்கலாமே? செலவுக்கு ஏற்ற வருமானம் வரும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட செலவுகள் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். வருட ஆரம்பத்தில் கொஞ்சம் டென்ஷன்ஸ் இருக்கு. அதைப் பற்றி அதிகம் கவலை வேண்டாம். போகப்போக சரியாகும்.

மகரம்

ஃப்ரெண்ட்ஸ்ஸால உதவி கிடைக்குங்க. . புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருந்த உங்களுக்கு இந்த வருஷம் திருப்புமுனை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். குறிப்பா வருடத்தில் இரண்டாம் பகுதியில்  மனசில் உறுதியும் செயல்களில் சுறுசுறுப்பும் உண்டாகும். தொழில் அண்ட் உத்யோகத்தை நீங்க  ரொம்பவும் கவனமாய்ச் செய்யப்போறீங்க. எனவே லாபமும் பாராட்டும் உண்டு. போதாக்குறைக்கு உறவினர்களின் பரிபூர்ண ஆதரவும் கிடைக்கும். பணம் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகுங்க.  உங்க அத்தியாவசிய தேவைகள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பிக்கும்.  குடும்பத்தில் சுப விரயங்களும், வீண் விரயங்களும் மிக்ஸட்டா உண்டுங்க. சமாளிச்சுடுவீங்க.

கும்பம்

குடும்பத்தில் சுமைகள் அதிகரிக்கும். ஆனால் வருடக் கடைசியில் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாதபடி மீண்டு மகிழ்ச்சியை எட்டுவீங்க. உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெறவும் முடியும். ஆனால் இந்த உயரத்தை எட்டுவதற்கு நீங்க கொஞ்சம் அதிகமாய் மெனக்கெடுவீங்க. செலவுகள் இருந்தாலும் அதெல்லாம் சூப்பர் செலவுங்களா இருக்கும். நீங்க செலவு செய்து முடிச்சுத் திரும்பினா வருமானம் காத்திருக்கும். உங்களோட அருமைங்களையும் பெருமைங்களையும் புரிஞ்சுக்கிட்டுப் பலரும் உங்களை நாடி வருவாங்க. அடுத்தவங்களுக்காக உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். வருட ஆரம்பத்தில் ஏராளமான லாபங்கள்  அல்லது வருமானங்கள் வரும்.

மீனம்

குடியிருக்கும் வீட்டைப் புதுப்பிச்சுக் கட்டவோ அல்லது வேறு அழகான வீட்டுக்கு மாற்றிக்கொண்டு போகவோ  சான்ஸ் வருங்க. இந்த வருடம் இரண்டாம் பகுதியில் அதிகப் பணம் எப்போதும் கையில் புரளும். குடும்ப நபர்கள் அதிகரிப்பாங்க. உங்க வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பலகாலம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் காணாமல் போகும். அம்மாவுக்கு வருட ஆரம்பத்தில் சின்ன பிரச்சினைகளோ சுகவீனங்களோ இருந்தால் டோன்ட் ஒர்ரி.  வருட மத்திய பாகத்திற்குப்பிறகு  நல்லாயிடுவாங்க.

முற்றும்…

கார்ட்டூன் கேலரி