2020ம் ஆண்டு ராசிக்கான பொதுப்பலன்-1: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்! வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. இந்த முறை புத்தாண்டு கும்ப ராசியில் பிறப்பதால் நாட்டில் சுபிட்சம் நிலவும் என்றும், ஆட்சியாளர்கள், மக்கள் அனைவருக்குமே இது சுபிட்சமான ஆண்டு என்று கூறப்படுகிறது.

நமது பத்திரிகை.காம் இணைய இதழுக்காக பிரபல ஜோதிடர் வேதா கோபாலன் 12 ராசிகளுக்கான பொதுப்பலன் களை துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையான முறையில் கணித்து வழங்கி உள்ளார். வாசகர்கள், தங்களது ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  மேஷம்   

இந்த 2020 ஆம் ஆண்டு நீங்க  குடும்பத்தினரின் மனமறிந்து செயல்பட்டு அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி நல்லபெயர் சம்பாதிச் சுடுவீங்க. பொருளாதாரம் நல்லபடியா அமையும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவாங்க. இதனால் மகிழ்ச்சி பொங்கும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். அதெல்லாம் சரிதான். ஆனாலும்.. புதியவங்களோ.. பழையவங்களோ… கொஞ்சம் ஜாக்கிரதையாப் பழகுவது நல்லதுங்க. மனசில் வைராக்கியம் அதிகமாகும். புதிய திட்டங்களை முயன்று பார்ப்பது பற்றி ஆர்வம் அதிகமாகுமுங்க. புதிசாக் கல்யாணம் ஆனவங்களுக்கு இந்த வருஷம் குழந்தை பாக்கியம் கிட்டும். அரசாங்க வழியில் வருட ஆரம்பத்திலேயே ஆதாயம் கிடைக்கும்.


ரிஷபம்:

டாடி மம்மி வகையில் சில அனுகூலமான பலன் உண்டுங்க. வெளியூர் அல்லது ஃபாரின்லேந்து நல்ல நியூஸ் வரும். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறையா யோசித்து அதன்பிறகு செயல்படுவது நல்லதுங்க. வருஷத்தின் முதல் பாதியில் எந்த விஷயத்திலும் யாரிடமும் ஜாக்கிரதையா இருங்க. எதையும் சந்தேகப்படுங்க. தப்பில்லை. ஆனா அதற்காக யார்கிட்டயும் கடுமையா நடந்துக்க வேணாங்க. உற்றார், உறவினர்களைப் பொருத்த வரையில்  உங்க முன்னேற்றத்தைப் பார்த்து சிலர் சந்தோஷமும் சிலர் பொறாமையும் கொள்வாங்க. எதையும் மனசில் ஏத்துக்காம உங்க வேலையை கவனிச்சுக்கிட்டே போங்க.

மிதுனம்

பல வருஷமா ‘டல்’லாயிருந்த உங்க வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாக தொடங்கும். புதிய முயற்சிகள் ஓரளவுக்குதாங்க கைகொடுக்கும். ஆனா ஆஃபீஸ்ல உங்கள் செயல்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பா அலுவலகம் சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குத்தான் சாதகமா முடியும்.  வருட ஆரம்பத்தில் என்னடா இதுன்னு லேசான கவலையும் பயமும் இருக்கத்தாங்க செய்யும். ஆனால் போகப்போக லைட் போட்ட மாதிரி வாழ்க்கை பிரைட்டா ஆயிடும். இந்த வருஷம் இரண்டாம் பாதியில் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகி ஒரு வழியா நிம்மதி கிடைக்கும். வீண் கோபத்தையும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்துடுங்க.

கடகம்

வருட ஆரம்பத்தில் புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். போகப்போக கவனமாய் இருக்கணும்.  திட்டமிடாது செய்யும் காரியங்களில் பெரிய வெற்றி எதிர்பார்க்க முடியாது என்றாலும் நல்லா யோசிச்சு எடுக்கும் முடிவுகள் நல்ல ரிசல்ட் தருங்க. குடும்பத்தில் சுபமான நல்ல செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற விஷயங்கள் வருடத்தில் இரண்டாம் பாதியில் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். உடன்பிறந்தவங்க கிட்ட இவ்ளோ காலமா இருந்து வந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கும். இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த நட்பு வட்டம் இன்னும் பெரிய அளவில் விரிவடையும். ஆனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு கொஞ்சம் கேர்ஃபுல்லா யோசிச்சு கவனமாய் இருந்துக்குங்க.

இந்த புத்தாண்டில் வாசகர்களின்  அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்று வாழ்வில் சிறந்து விளங்க பத்திரிகை டாட் காம் வாழ்த்துகிறது…

தொடரும்…

நாளை – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்….

கார்ட்டூன் கேலரி