2020 ஒலிம்பிக்: ஜப்பானில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள்

டோக்கியோ:

ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை காண அதிகளவில் பார்வையாளர்கள் வரும் 10 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களது மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர் மக்கள் அதிகம் வருவார்கள் என்று அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.