நாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம்

சென்னை:
ட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் நடக்க உள்ள  அதிமுக செயற்குழு – பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.