கொல்கத்தா: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ந்தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2020  ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக) தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தவில் நடைபெற்றது. அப்போது,  ஒவ்வொரு அணிக்கும், கடந்த ஏலத்தில் இருந்த மீதத்தொகையுடன் சேர்த்து, கூடுதலாக 3 கோடி வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள   ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் 2020 டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏல அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, ஏலம் வரும் பிப்வரி மாதம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏன்னற்ல், ஐபிஎல் அணி நிர்வாகத்தின், தங்களிடம் உள்ள வீரர்களை தக்கவைப்பது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க  ஜனவரி 20ந்தேதி வரை பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. அதன்பிறகே ஐபிஎல் ஏலம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், பிப்ரவரி 11ந்தேதி ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி முதல் வாரம் நடக்க உள்ள  பிசிசிஐ கூட்டத்தில்,  ஏலத்திற்கான தேதி குறித்தும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  இதற்கான டிரான்ஸ்பர் டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. இந்த விண்டோவின் மூலம் ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்ற முடியும். தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை பிற அணிக்கு இதன் மூலம் மாற்ற முடியும்.

இதையடுத்து, இன்னும் 15 நாட்களில் பல வீரர்கள் பல்வேறு அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த 15 நாட்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியில் இருக்கும் வீரர்களை தங்கள் அணிக்குள் இழுக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.