2021ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: தமிழக அரசின் அரசாணை வெளியீடு

சென்னை: 2021ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை என்பது குறித்த அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு (2021) 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தொழிலாளர் தினம், தீபாவளி, ஆயுத பூஜை என 23 நாட்கள் அரசு விடுறையாகும். இதில் ஆறு நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்  கூறியிருப்பதாவது,

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 1957ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் 25 ஆம் பிரிவில், விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன், பின்வரும் நாட்களும் 2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும்.

ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை, பொங்கல்

ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை, உழவர் திருநாள்

ஜனவரி 26ம் தேதி செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்

ஏப்ரல் ஒன்றாம் தேதி, வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை,

புனித வெள்ளி ஏப்ரல் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14ஆம் தேதி புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்ரல் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி

மே 1ம் தேதி சனிக்கிழமை மே தினம்

மே 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ரம்ஜான்

ஜூலை 21 ஆம் தேதி புதன்கிழமை பக்ரீத்

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மொகரம்

ஆகஸ்ட் 30-ஆம் தேதி திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி

அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை, ஆயுத பூஜை

அக்டோபர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விஜயதசமி

அக்டோபர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி

நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை, தீபாவளி

டிசம்பர் 25ஆம் தேதி, சனிக்கிழமை கிறிஸ்துமஸ்.

ஏப்ரல் 1ம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு என்பது தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.