சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக கூட்டணியில், பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில், அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாகவும் செய்திகள் வெளியாகின.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதைவிட சில தொகுதிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாஜகவுக்கு வெறும் 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது அதிமுக. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக போட்டியிட்ட தோல்வியடைந்த கன்னியாகுமரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மரணமடைந்த காரணத்தால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.