‘அதிமுக’வை தினகரன் கைப்பற்றுவாரா? என்ன சொல்கிறார் பாலாஜி ஹாசன்! (வீடியோ)

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை.காம் இணைதளத்துக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியின்போது, தலைமை செய்தியாளர் பிரியாவின் அதிரடி கேள்விகளுக்கு அசராது பதில் அளித்துள்ளார் பாலாஜி ஹாசன்.

தமிழகத்தில் கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில்,  வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழகத்தில் வெற்றிப்போவது யார்? எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும்… அதிமுக அப்படிய தொடருமா அல்லது சசிகலாவின் கைக்குள் சிக்குமா? அதிமுக அமமுக இணையுமா ?  டிடிவி தினகரனின் எதிர்காலம் என்ன? ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?  வாரிசு அரசியல் எப்படி போன்ற பல்வேறு சரமாரியான கேள்விகளுக்கு பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன்  பதில் அளித்துள்ளார். 

இது மட்டுமின்றி ரஜினியின் அரசியல் எப்படி இருக்கும்? வருவாரா என்கிற கேள்விக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்?  ஜாதகம், கிரக நிலை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

பாலாஜிஹாசன் பேட்டியின் முதல்பகுதி இதோ உங்களுக்காக…. 

 

 

 

கார்ட்டூன் கேலரி