சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல்

சென்னை:

சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர் கலந்து கொண்டனர். இதில் 392 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு அவர்களுக்கான நோய் பாதிப்புக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.