சென்னை:

மிழ்நாடு துணை நீதித்துறை சேவை மூலம் மாவட்ட நீதிபதிக்கு தேர்வு செய்யப்பட்ட 203பேருக்கு அதற்கான பயிற்சி மற்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் 8 மாதங்களாக முடக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8 மாதங்களாக முன்பு நீதிபதிகளுக்கான தேர்வில் 203 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  ஆனால், அதன் பிறகு அவர்களுக்கு எந்தவித பயிற்சியும் கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் முயற்சியோ, நடவடிக்கையோ எடுக்க முன்வராத நிலையில், அவர்கள் பணியமர்த்தப்படுவது முடங்கி உள்ளது. அவர்கள் தங்களது கடமையை செய்ய முடியா நிலை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து கூறிய மூத்த நீதித்துறை அதிகாரி, “உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, நீதித்துறைகளில் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அப்பால் இதுபோன்று இழுத்தடிக்க முடியாது. நீதிபதிகள் தேர்வு  அறிவிப்பு தேதியிலிருந்து எட்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில், இது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. இது குற்றவியல் நீதி வழங்குதலின் நிர்வாகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் 11,20,963 ஆகும், இதில் 4,72,673 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், நீதிபதிகள் பணி வழங்கப்படாமல் உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.