பெய்ஜிங்:

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை குறித்த 20வது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

 

இந்தியா-சீனா இடையே இதுவரை எல்லை வரையறை செய்யப்படாமல் உள்ளது. இது தொடர்பாக 19 முறை இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், ‘‘இந்தியா சீன இடையே இருநாட்டுபிரதிநிதிகள் பங்கேற்கும் 20-வது சுற்று பேச்சுவார்த்தை டில்லியில் டிசம்பரில் நடக்கவுள்ளது.

அப்போது இந்தியா, சீனா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும் நடக்கவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால், சீனா அரசு பிரதிநிதி யங்ஜெயிச்சி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது’’ என்றார்.