21/05/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

--

சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

மிழகத்தில் நேற்று  ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில்,  557 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி,

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை:  8,228

நோய் தொற்றில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை:  2826.

பலியானோர் எண்ணிக்கை: 59

தற்போது நோய்தொற்றால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை: 5300

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் பொருத்த வரை ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192, திரு.வி.க. நகரில் 976, தண்டையார்பேட்டையில் 773, அண்ணா நகரில் 662 ஆக கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.