ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும் 9.64 லட்சமாக உயர்ந்துள்ளது.

இன்று (21ந்தேதி) காலை 7மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளோர் எண்ணிக்கை 3,12,23,652 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  9,64,762ஆக உயர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும், இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,17,541 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,64,762 ஆக அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்காவே தொடர்ந்து  கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.  அங்கு தொற்று பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 7,004,768  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத் எண்ணிக்கை 204,118   ஆக உள்ளது.  இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 4,250,140 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  2,550,510  ஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,485,612 உள்ளது.  இதுவரை 87,909 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 4,392,650 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,005,053 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,544,629 ஆகவும்,  இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 136,895 ஆகவும் உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,851,227  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 556,507  ஆக உள்ளது.