டெல்லி: அஸ்ஸாம், மே.வங்கம் மாநிலங்களில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவவரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி அஸ்ஸாமில் 27.71 சதவிகித வாக்குகளும், மேற்குவங்க மாநிலத்தில், 29.27 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1)  2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . மாநில முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பதற்றம் நிறைந்த சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு என்பதும் போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 800 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 245 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு மாநிலங்களிலும் இன்று காலை முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். கடந்த 3 மணி நேரத்தில் மேற்குவங்க மாநிலத்தில் 29சதவிகிம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.