வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய 21 நாள் அவகாசம்: மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம்

--

டில்லி:

டந்த  2018-19-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக வருமான தாக்கல் செய்யவேண்டும் என்றும், அதற்காக  21 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும்  மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அறிவித்து உள்ளது.

2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள், 21 நாளில் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது கணக்குத் தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிமாற்றம் மேற்கொண்டு, இதுவரை 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை மூலம் எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் அனுப்பப்படும். அதில் 21 நாள்களில் அவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் (1961) படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோர் ஆன்லைன் மூலம் விளக்கம் அளிக்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இருந்தால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்து உள்ளது.