ஊழல் புகாரில் சிக்கிய 21 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

டெல்லி:

ழல், முறைகேடு புகார்களில் சிக்கிய வருமானவரித்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊழல், முறைகேடு இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் வகையில், ஊழல் புகார்களில் சிக்கும் அதிகாரிகளை மத்தியஅரசு பணிநீக்கம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் முதல் ஊழல் புகார்களில் சிக்கும் அதிகாரிகளை கட்டய ஓய்வு முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது, மும்பை, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் வருமான வரித்துறையில் பணியாற்றிய குரூப் பி தரத்திலான 21 அதிகாரிகள் கட்டாய ஓய்வின்படி, பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள்மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த 64 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 21 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.