போபால் :

த்திய பிரதேசம் மாநிலத்தில் திருமணம் முடிந்து மினி லாரியில் திரும்பியபோது,  மினி லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் இருந்து 573 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள   சித்தி மாவட்டத்தில், திருமணம் முடிந்ததும், ஒரே ஊரைச்சேர்ந்த  சுமார் 50 பேர் மினி லாரி ஒன்றின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

நள்ளிரவில்  பாலத்தின் மீது மினி லாரி சென்ற போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 70 உயர பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்தவர்களில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்  12 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், அக்கம் பக்கத்தினர் உடடினயாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்துக்கு குறித்து கேள்விப்பட்ட மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்