சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது வழக்கு பதிவு…

சேலம்:
சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளி மாநிலம் சென்று வந்ததை அவர் மறைத்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு அவர் மூலம் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை (ஜூலை 6ந்தேதி மாலை)  1288 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 413 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.  தற்போதைய நிலையில் 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில்.  சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்  மகாராஷ்டிரா  மாநிலம் சென்றுவந்ததை நகராட்சிக்கு தகவல் தராமல், கொரோனா தொற்றுடன் நடமாடியதால்,  அந்த பகுதியில் உள்ளவர்கள் தொற்று பரவியது.
இது தொடர்பாக அவர்மீது  கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி