65 நாளில் 21 புலிகள் சாவு: வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி!

--

டில்லி,

ந்தியாவில் புலிகளின் சாவு எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி.மாமிசம் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்தது புலி என்றால் மிகையாகாது.

ஆனால், சமீப வருடங்களாக இந்தியாவில் புலிகளின் சாவு அதிகரித்து வருகிறது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல்,  விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு புலிகளுக்கு எதிரான ஆண்டு என்றும், கடந்த 65 நாட்களில் 21 பெரிய புலிகள் மரணமடைந்துள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய தகவலை நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, மத்திய சுற்றுச்சூழல் இணைஅமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் புலிகளின்  மரணங்கள் 25% அதிகரித்துள்ளதாக  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவில், 2006ம் ஆண்டு கணக்கெடுப்புபடி 1411 புலிகள்தான்  இருந்தது என்றும்,  ஆனால் இந்திய அரசு எடுத்த கடும் முயற்சியின் காரணமாக 2014ம் ஆண்டு லிகளின் எண்ணிக்கை  2,226 என உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCT) தற்போது புலிகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில், இந்த ஆண்டு புலிகளுக்கு மோசமான ஆண்டாக உள்ளது என்றும், கடந்த 65 நாட்களில் மட்டும் 21 புலிகள் மரணமடைந்து உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறி உள்ளது.

கடந்த ஆண்டு இந்த காலத்தில் 19 புலிகள் இறந்தது என்றும், கடந்த 2016 ஆண்டு முழுவதும் 99 புலிகள் இறந்துள்ளன என்றும் கூறியுள்ளது. இது கடந்த 6 வருடங்களில் அதிக எண்ணிக்கை யிலான சாவு என்றும் கூறியுள்ளது.

மேலும்,  2012ம் ஆண்டு 72 புலிகளும், 2013ம் ஆண்டு 63ம், 2014ம் ஆண்டு 66 புலிகளும், 2015ம் ஆண்டு 70 புலிகளும் சராசரியாக இறந்துள்ளன என்றும் கூறியுள்ளது.

ஆனால், 2016ம் ஆண்டுதான் அதிக அளவிலான 99 புலிகள் இறந்துள்ளது. இதில் 21 புலிகள் இயற்கை காரணங்களாலும், 12 புலிகள் சண்டையாலும், 5 புலிகள் விஷம் காரணமாகவும், 1 புலி விபத்திலும், ஒரு புலி கீழே விழுந்தும், மனிதர்களை தாக்க முயற்சித்ததன் காரணமாக இரண்டு புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்து ள்ளது.

புலிகளின் அதிர்ச்சிகரமான சாவு வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.