21 வயது பெண்  பலாத்காரம்…  17 வயது சிறுவனின் வெறியாட்டம்… 

21 வயது பெண்  பலாத்காரம்…  17 வயது சிறுவனின் வெறியாட்டம்…
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முழுவதுமாக தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களிலேயே சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்நிலையில், வடசென்னை ஏரியாவின் மருந்துக்கடை ஒன்றில் பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த சிறுவன் ஒருவன் இவரது கையைப்பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளான்.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் அவனிடமிருந்து தப்பிக்கப் போராடியுள்ளார்.
ஆனால் அச்சிறுவன் இவரின் கையைப்பற்றி ரயில்வே டிராக்கின் இருட்டான பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று தகாத முறையில் நடக்க முயன்றுள்ளான்.  பதற்றமடைந்த அந்தப்பெண் உதவிக்குக் கூச்சலிட, ஆள் நடமாட்டமே இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை.  எப்படியோ போராடி அவனிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டார் அவர்.  வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அச்சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார்.
அப்போது இச்சிறுவனுக்கு வயது 17 தான் ஆகிறது என்பதுடன், இவன் மேல் ஏற்கெனவே செல்போன் பறிப்பு வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.  போலீசாரிடமும், அப்பெண்ணிடமும் தான் மது போதையில் இருந்ததாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளான் அச்சிறுவன்.  எனினும் அவன் மேல் வழக்குப் பதிவு செய்து அவனைச் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளனர் போலீசார்.
17 வயது சிறுவனின் இந்த தகாத செயல் வடசென்னை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– லெட்சுமி பிரியா