சென்னை:

மிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு தொடங்கிய நிலையில், 21,085 பேர் தேர்வை எழுதவில்லை என்ற தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு  சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து இன்றும், நாளையும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இன்று முதல்நாள் தேர்வு நடைபெற்றது.

இன்று  நடைபெற்ற தகுதித் தேர்வில் இடை நிலை ஆசிரியர் பணிக்கான  முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 21,085 பேர்  தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது.  விண்ணப்பித்த 1,83,415 பேரில் 1,62,330 பேர் தேர்வை எழுத்தியுள்ளனர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.