பெங்களூரு:
ர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்டின் தலைவர் சுவாமி ஆனந்த் சரஸ்வதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சிலை கலாச்சாரம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட சர்தார் வல்லபாய் படேல் என்ற மிக உயரமான சிலையை வைத்து மத்திய அரசு சாதனை செய்தது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 215 மீட்டர் உயரத்தில் உருவாக உள்ள இந்த சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் வைக்கப்பட உள்ளது. இந்த சிலையை வைக்க மொத்த செலவு ரூபாய் 1200 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

சுவாமி ஆனந்த் சரஸ்வதி என்பவர் இந்த ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்டின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனுமான் சிலை ரூபாய் 1200 கோடி செலவில் வைக்க உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.