சென்னையில் 23 பேர்: கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் …

--
சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்  மேலும் 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 219 பேர்  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சூழலில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பிலிருந்து  தமிழகம் முழுவதும் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக டிஸ்சார் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 1,824ஆக உயர்ந்துள்ளது.  இது  27.9 சதவிகிதம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.