219வது குருபூஜை: மருது சகோதரர்களின் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் மரியாதை…

மதுரை: மருது சகோதரர்களின் 219வது குருபூஜையையட்டி, மதுரையில்உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களின் 219-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ளது. இதையொட்டி, அவர்களது உருவ சிலைக்கு, அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இன்று தேவர் ஜெயந்திக்காக மதுரை வந்த முதல்வர்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்  மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது,  மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது கட்சி நிர்வாகிகளுடன் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.