சென்னை:

மிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் நாளையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்  21ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ந்தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.

இதற்கிடையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இருப்பதாகவும், ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அதிகாரிகள் கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டைய்ன் கூறும்போது, வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால்  பல அரசு  பள்ளிகளில்  இந்த மாதம் 30நதேதி வரை பள்ளி செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நாளையுடன் இந்த கல்வி ஆண்டுக்கான வேலைநாட்கள் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை மே 31ந்தேதி வரை நீடிக்கும்.

அதைத்தொடர்ந்து, ஜூன் 1ந்தேதி பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக ஏப்ரல் 30ந்தேதி வரை பள்ளிகள் இயங்கும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் வாய் மொழி உத்தரவாக  தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே  அமைச்சர் 20ந்தேதியுடன் பள்ளி மூடப்படுவதாக அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறி உள்ள நிலையில்,அதிகாரிகள் 30ந்தேதி வரை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.